Main Menu

தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் சாத்தியம் அற்றவை : முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா

தமிழ் கட்சிகள் முன்வைக்கின்ற 13 அம்சக் கோரிக்கைகள் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றவை ஏனெனில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தென்னிலங்கை மக்களின் வாக்குகளை மையமாக வைத்தே செயற்படுகின்றார்கள். ஆகவே தமிழ் மக்கள் தங்களின் உரிமைக் கோஷங்களை கைவிடாது நடைமுறைச் சாத்தியமானவற்றை முன்வைப்பதே பொருத்தமானதாகும். என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.

ஐந்து தமிழ் கட்சிகளின் கோரிக்கையும் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் நேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் தென்னிலங்கையில் பல வாக்குறுதிகளை பிரச்சாரங்களில் கூறிவருகின்றனர். இந்நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் வடக்கில் இருக்கின்ற ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளினதும் வேட்பாளர்களும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனக் கூறியுள்ளனர்.

தற்போதைய தேர்தல் காலச் சூழ் நிலையில் தென்னிலங்கை தரப்புக்கள் அப்பகுதி மக்களின் வாக்குகளை மையமாக வைத்தே செயற்படுகின்றார்கள். இந்நிலையில் நாம் தற்போது நடைமுறைக்கு சாத்தியமாகத விடையங்களை முன்வைத்தால் அது எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது சந்தேகமே.

நாம் பொதுஜனப் பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளோம்.நாம் எமது கோரிக்கையாக 13 ஆவது அரசியல் அமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளோம். அது தென்னிலங்கையில் எந்தச் சந்தர்ப்பதிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் ஏனெனில் அது ஒரு சட்டம் எனவே அதை நாம் நிறைவேற்றுவது தொடர்பில் நம்பிக்கையுடன் உள்ளோம் அதற்காக தமிழர்களின் உரிமைக்கோஷங்களை கைவிட்டு விடக்கூடாது தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது இப்போது கோரிக்கையாக முன்வைத்துள்ள விடையங்களிலும் பார்க்க வலுக்குறைந்த அரசியல் அமைப்பைக்கூட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கூறிக்கொள்ளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் நிறைவேற்றமுடியவில்லை. 

இந்நிலையில் இப்போது நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஆனால் நாம் தமிழ் மக்களுக்கான நடைமுறைச்சாத்தியமான கோரிக்கைககளை முன்வைத்துள்ளோம். அதனை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் கூறப்படும். நாம் நடைமுறைச் சாத்தியமான விடையங்களான 13 ஆம் திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த காணாமல் போனவர்களின் பிரச்சினை உள்ளடங்கலாக பல விடையங்களை வலியுறுத்தியுள்ளோம் 

அவை தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு அதன் ஊடாக நாம் மக்களுக்குக் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவோம் என்ற தற்துணிவும் உள்ளது என்றார்.

பகிரவும்...