Main Menu

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 5 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்…

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இந்த 6 பேரும், தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து வந்த 2 பேரும், நியூசிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவரும், தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உலகை உலுக்கி வரும் கொரோனா, தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. இங்கு, கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. ஏற்கனவே
காஞ்சிபுரம் என்ஜீனியர், உத்தரபிரதேச முடிதிருத்தும் தொழிலாளி, அயர்லாந்தில் இருந்து திரும்பி வந்து, விருகம்பாக்கத்தில் தங்கி இருந்த கல்லூரி மாணவர் ஆகிய மூவர், கொரானாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இப்போது தாய்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து நியூசிலாந்து சென்று விட்டு திரும்பிய மற்றொருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மூவரும், தனிமை வார்டில் தங்க வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். கொரானாவால், தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 6 பேரில், 2 பேர் வெளிநாட்டவர், ஒருவர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர். எஞ்சிய மூவர், தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

வேறுபட்ட பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாதிப்பு இது என குறிப்பிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், ரெயில் நிலையம், விமான நிலையம் மற்றும் துறைமுகம் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி , கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

நியூசிலாந்தில் இருந்து தமிழகம் வந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், திரைப்படத்துறையின் பழம்பெரும் தயாரிப்பாளர் ஒருவரின் உறவினர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இருந்து தமிழகம் வந்த இவர்கள் 3 பேரும் இதுவரை எத்தனை பேரை சந்தித்தனர்- அவர்களெல்லாம் தற்போது எங்கு இருக்கிறார்கள் என கண்டறிந்து, பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.

பாதிக்கப்பட்ட மூவருடன் தொடர்பில் உள்ள அனைவரையும் சிறப்பு மருத்துவமனைக்கு வரவழைத்து, மருத்துவ பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

பகிரவும்...