Main Menu

தமிழன் என்று சொல்வது குறுகிய நோக்கம் அல்ல- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பேரறிஞர் அண்ணாவால் 18.7.1967-ம் ஆண்டு தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டதுத்தை பெருமை படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை தமிழ்நாடு நாள் விழா நடந்தது. இந்த விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமாகி மருத்துவர்களின் ஆலோசனைப் படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறேன். மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தில் நேரில் பங்கேற்க வில்லை. தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. தமிழ் நாடு என்று பெயர் சூட்டுவதற்கே பல பத்தாண்டு காலம் போராட வேண்டி இருந்தது. தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட முடிந்தது. தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது தி.மு.க.வின் சாதனையாகும். கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழ்நாடு நகர மயமாக இருந்தது என்பதற்கு கீழடியே ஆதாரம் ஆகும். தமிழ் இனம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் இனம் என பெருமிதம் கொள்கிறேன். உலகில் முதலில் பிறந்த குரங்கு தமிழ் குரங்குதான். தாழ்ந்து கிடந்த தமிழகத்தை தலைநிமிரச்செய்த நாள் தான் ஜூலை 18 தமிழ், தமிழன் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். தமிழ் நாடு என்பது வெறும் வார்த்தையல்ல, ரத்தமும் சதையும் கொண்ட உரிமை போராட்டம் தமிழன் என்று சொல்வது குறுகிய நோக்கம் அல்ல. இவ்வாறு அவர் பேசினார். அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று தமிழ் வாழ்க என்று கூறினார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு தினத்தையொட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவிஞர்கள் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. மாநிலத் திட்டக் குழு, துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமை வகித்தார். கருத்தரங்கில், சமூக நீதி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப, வீரபாண்டியன் “தமிழ்நாடு உருவான வரலாறு”, குறித்து கருத்துரை வழங்கினார். ஆழி செந்தில்நாதன் “மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும்” என்ற தலைப்பிலும் .வாலாசா வல்லவன் “தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்” என்ற தலைப்பிலும் ம.ராசேந்திரன்” தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டிய தனயன்” என்ற தலைப்பிலும் நா.எழிலன் “முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு” என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

பகிரவும்...