Main Menu

தடுப்பூசி செலுத்தாதவர்களை கைது செய்யவும் முடியும் – பிலிப்பைன்ஸ்

கிராம அதிகாரிகளை வீடு வீடாக சென்று அனைத்து குடியிருப்பாளர்களின் தடுப்பூசி நிலையை பதிவு செய்ய அனுமதிக்கும் உத்தரவை, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் வெளியிடவுள்ளது.

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்ய உத்தரவிடுவேன் என்று ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே கடந்த வாரம் எச்சரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உட்துறை செயலாளர் எட்வர்டோ அனோ புதிய உத்தரவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது நாடு முழுவதும் உள்ள 42,046 கிராமங்களில் ஒவ்வொன்றின் தடுப்பூசி நிலையின் முழுமையான தரவுகளை உருவாக்குகிறது என்று அவரது துணை எபிமாகோ டென்சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தனிநபர்கள், குறிப்பாக தடுப்பூசி போடப்படாதவர்கள், அடையாளம் காணப்பட்டவுடன், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்காக அவர்கள் தங்களுடைய குடியிருப்பை விட்டு வெளியே செல்வார்களா இல்லையா என்ற நோக்கங்களுக்காக அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

தடுப்பூசி போடப்படாத குடியிருப்பாளர்கள் அத்தியாவசிய நோக்கங்களுக்காக தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறினால் அபராதம் விதிக்கப்படும்’ என கூறினார்.

பகிரவும்...