Main Menu

டொரியன் புயலால் கனடாவில் மண்சரிவு

பஹாமாஸ் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்திவரும் டொரியன் புயல் கனடாவையும் விட்டுவைக்கவில்லை.

டொரியன் புயல் காரணமாக கனடாவின் நோவா ஸ்கோரியா மாகாணத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு இன்று காலை வரை 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கலிஃபக்ஸ் பிராந்தியத்தில் நேற்று (சனிக்கிழமை) மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயலினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், கடல் நீரும் சில பகுதிகளில் உட்பகுந்துள்ளது.

அதுமட்டுமல்லாது பல இடங்களில் மின் கம்பங்கள் முறந்து வீழ்ந்துள்ளதால் நான்கு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனர்த்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரல்ப் கூடலே தெரிவித்துள்ளார்.

பஹாமாஸை டொரியன் புயல் சின்னாபின்னமாக்கியதன் பின்பு அது வடகரோலினா மற்றும் கனடாவை நோக்கி நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...