Main Menu

டெல்லியில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை குறைந்தது!

டெல்லியில் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளது. பொதுவாக அக்டோபர் மாதத்தில் 19 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் 12.5 டிகிரியாக வெப்பநிலை பதிவானது. இது கடந்த 26 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் பதிவான குறைவான வெப்பநிலையாகும்.

இதைப்போல நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலும் இந்த ஆண்டு இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது. நேற்று அதிகாலை நிலைவரப்படி 10.8 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை இப்படி வழக்கத்தைவிட குறைவாக இருப்பதற்கு மேக மூட்டம் இல்லாததே காரணம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...