Main Menu

டிரம்ப் மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ஜனாதிபதி டிரம்ப் சுட்டுரையில் உறுதி செய்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே ஜனாதிபதியின் உதவியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி டிரம்புக்கும தொற்று உறுதி செய்யப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...