Main Menu

ஜேம்ஸ் போண்ட் புகழ் சேர் சீன் கோனரி காலமானார்!

ஜேம்ஸ் போண்ட் கதாபாத்திரத்தில் பிரபலமடைந்த ஸ்கொற்லாந்து நடிகர் சேர் சீன் கோனரி (Sir Sean Connery) தனது 90ஆவது வயதில் காலமாகியுள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சேர் சீன், பஹாமாஸில் (Bahamas) இருந்தபோது, சில மணிநேரம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இவர், ஜேம்ஸ் போண்ட் கதாபாத்திரத்தை பெரிய திரைக்குக் கொண்டுவந்தவர் என்பதுடன் 007 போன்ற புலனாய்வுக் கதை திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.

அத்துடன், இவரது ஐந்து தசாப்த கால நடிப்பு மற்றும் 1988ஆம் ஆண்டில் தி அண்டச்சபிள்ஸில் (The Untouchables) படத்தில் நடித்ததற்காக ஒஸ்கார் விருதை வென்றுள்ளார்.

சேர் சீனின், ‘தி ஹன்ட் ஃபோர் ரெட் ஒக்டோபர் (The Hunt for Red October)’, ‘ஹைலாண்டர் (Highlander)’, ‘இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones)’, ‘தி லாஸ்ற் க்ரூஸேட் (the Last Crusade)’ மற்றும் ‘தி  ரொக் The Rock’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

பகிரவும்...