Main Menu

ஜூலை 14, பிரான்ஸ் தேசிய நாள் நிகழ்வில் பல இடங்களில் வன்முறை

இன்று ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வில் பல இடங்களில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறிப்பாக இன்றையதினம் சோம்ப்ஸ்-எலிசேயில் பலதரப்பட்ட குழுக்களைச் சேத்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மஞ்சள் மேலங்கி போராளிகள் களத்தில் இறங்கி போராடியதுடன், வன்முறையிலும் ஈடுபட்டனர். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இன்று காலையிலேயே மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களான Maxime Nicolle மற்றும் Jérôme Rodrigues  ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

பகிரவும்...