Main Menu

ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்குப் பயணம் – மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டு அரசியல் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொறுப்பேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதுக் குறிப்பிடப்படுகின்றது.

பகிரவும்...