Main Menu

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிற்கும் பக்கம் தவறானது – எனவேதான் தர்மத்தின் வழியில் அவரை எதிர்க்கின்றோம்-இராதாகிருஷ்ணன்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லவர் ,சிறந்த அறிவாளி. ஆனாலும் அவர் தற்போது நிற்கும் பக்கம் தவறானது. எனவேதான் தர்மத்தின் வழி சென்று அவரை நாம் எதிர்க்கின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வட்டவளையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் “போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கப்படமாட்டாது என பிரதமரான பின்னர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். ஆனால் ஜனாதிபதியான பிறகு மறுநொடியே போராட்டக்காரர்களை அகற்றினார். சொல் ஒன்று செயல் வேறு வடிவம் என்பதை அவர் நிரூபித்தார். உண்மையின் வழி நின்றகவில்லை.

கர்ணன் சிறந்தவர், நல்ல கொடையாளி, துரியோதனன் கூட்டத்துடன் நின்றதால் அவர் வதம் செய்யப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது இருக்கும் இடம் சரியில்லை. நாம் தர்மத்தின் பக்கம்தான் நிற்போம். ரணிலும், மஹிந்தவும் தர்மம் செய்யவில்லை. எனவே, தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் ” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...