Main Menu

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றால் நிராகரிப்பு

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து செட்டியோராரி எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி  நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காலி முன்னாள் நகர பிரதா மெத்சிறி டி சில்வா இந்த மனுவை தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி  ஜனாதிபதித் தேர்தலின் போது அடுத்துவரும் 6 வருடங்களுக்கே ஜனாதிபதியாக தெரிவு செய்ததாகவும், அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் 5 வருடங்கள் நிறைவடைந்ததும் , தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அரிவித்தலை பிறப்பித்து, எதிர்வரும் 7 ஆம் திகதி வேட்பு மனுவும் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...