Main Menu

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? ஒருமித்த முடிவே இன்றைய தேவை – சிவசக்தி ஆனந்தன்

ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த முடிவே இன்றைய தேவாயாகவுள்ளதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டிதன் அவசியம் பற்றி வடக்கில் தீவிரமான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

முதலாவதாக இந்த நிலை தோன்றியதற்கான காரணத்தை ஆராய்வது அவசியம் என்று கருதுகிறேன். தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களுக்கு இருந்த ஒரே தெரிவு பாராளுமன்ற ஜனநாயக அரசியல்தான். அதனால்தான் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்தனர். 

தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்றதால்தான் கூட்டமைப்பின் வெற்றி சாத்தியமாயிற்று. மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டு கூட்டமைப்பின் பெயரால் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது கட்சியை வளர்த்துக் கொள்வதிலும் அங்கத்துவக் கட்சிகளை ஒதுக்கிவைப்பதிலுமே தனது கவனத்தைச் செலுத்தியது. அதே நேரம் மக்கள் நலனில் அக்கறையின்றியும் செயற்பட்டு வருகின்றது. இவை மக்களை முகம் சுழிக்கச் செய்துள்ளன. எனவே மக்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டிலிருந்தே இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நலன்களிலிருந்து விலகிச் செல்லும் முடிவை எடுத்து விட்டது. அப்பொழுதிலிருந்தே தமிழரசுக் கட்சி தன்னிச்சையான முடிவுகளை எடுத்து அவைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளாக அறிவிக்கத் தொடங்கிவிட்டது. இவற்றிற்கெதிராக நாம் குரல் கொடுத்த பொழுதிலும் அவை கணக்கிலெடுக்கப்படவில்லை.

கடந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருந்த வேளையில், இது சரியான தருணம். எனவே எமது கோரிக்கைகளை நிபந்தனைகளாக வைத்து சில உத்தரவாதங்களைப் பெற்று நாம் எமது ஆதரவினை வழங்குவோம் என்று கூறியதற்கு கௌரவ சம்பந்தன் ஐயா அவர்கள் நாம் நிபந்தனைகளை வைத்தால் சிங்கள மக்கள் மைத்திரிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்னை நம்புங்கள் என்று எமது வாயை அடைத்தார்.

அதே நேரம் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் சம்பந்தனைப் பார்த்து 2015 ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக நாங்களும் நீங்களும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்வோம் என்று கேட்டதற்கு நான் உங்களை நம்புகிறேன் என்று பதிலளித்தற்கு பிற்பாடு இன்னமும் நீங்கள் சிங்களத் 

வேட்பாளர்களிற்க்கும் இராஜதந்திரிகளுக்கும் தெரிவித்து, அவர்களின் கருத்தை அறிந்து, பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் முடிவெடுப்பதே சாலச்சிறந்தது அந்தவகையிலே தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் ஆறு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக முடிவெடுப்பது என தீர்மானித்துள்ளோம்.

இன்றைய நிலைக்கு முழுமுதற் காரணமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுமே என்பதை அந்தக் கட்சியினர் ஏற்றுக்கொண்டு இந்தத் தேர்தல் அந்தக் கட்சி விட்ட தவறைத் திருத்திக்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து அவர்களும் தாம் தனியே சென்று வேட்பாளர்களைச் சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டு, ஒட்டுமொத்த தமிழ் பிரதிநிதிகளுடன் இணைந்து கைகோர்த்துச் செயற்பட முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.மற்றபடி ஏனைய தமிழ் கட்சிகளும் பொது அமைப்புக்களும் மதத்தலைவர்களும் புத்திஜீவிகளும் பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் மக்கள் ஆகியோர் ஓரணியிலேயே இருக்கின்றன. மக்களும் பெருமளவில் இந்தப் பக்கத்திலேயே இருக்கின்றனர் என தெரிவித்தார்.

பகிரவும்...