Main Menu

ஜனாதிபதி கோத்தாபயவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர அரசியல் புரிந்துணர்வை மேலும் விரிவுபடுத்தி, இராஜதந்திர ரீதியான ஒத்துழைப்பில் புதிய அத்தியாயமொன்றை உருவாக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கடிதமொன்றின் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். 

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பேணப்பட்டு வந்த பாரம்பரிய நட்புறவானது, தற்போதைய பூகோள மாற்றங்களின் மத்தியில் மேலும் தெளிவானதாகவும், முக்கித்துவமுடையதாகவும் மாறியிருக்கின்றது. இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றுக்கு உங்களால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவையும், பங்களிப்பையும் பெரிதும் வரவேற்கின்றேன்.

உங்களுடைய செயல்கள் வெற்றி பெறவேண்டும் என்றும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்திக்கின்றேன். இலங்கை மக்கள் அனைவரும் சுபீட்சத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க வேண்டும். சீன – இலங்கை நட்புறவு மேலும் நீண்ட காலத்திற்குத் தொடரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...