Main Menu

சேவல் கூவியதால் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு!

பிரான்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விநோத வழக்கு பலரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

பிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்கப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சேவல் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என பிரான்ஸ் தீவுகளில் ஒன்றான ஒலெரானில் வாழும் ஓய்வு பெற்ற தம்பதியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சேவலின் சொந்தக்காரர் கொரீன் ஃபெசௌ எல்லா சேவல்களும் என்ன செய்யுமோ அதை தான் தன்னுடைய சேவலும் செய்வதாக கூறியுள்ளார்.

குற்றம் சாட்டியவர்களான ஜீன் லூயிஸ் பிரொன் மற்றும் ஜோலி அண்ட்ரியாக்ஸ் 15 வருடங்களுக்கு முன்பு சென்பியரிட் ஒரெலான் என்னும் கிராமத்தில் தங்கள் விடுமுறை தினங்களுக்கான இடத்தை கட்டியிருந்தனர். பின்னர் அது அவர்களின் ஒய்வு தினங்களுக்கான வீடாக மாறியது.

இந்த கிராமத்தை அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமே இங்குள்ள அமைதிதான். ஆனால் மோரிஸின் இந்த சத்தம் 2017 இல் தொடங்கியது. அந்த பகுதியில் 35 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஃபெஸெள தாங்கள் சொல்வதைக் கேட்காமல் இருந்ததே இந்த பிரச்சனை பெரிதானதற்கு காரணம் என்கின்றனர்.

ஃபெஸெளவும் அவரின் ஆதரவாளர்களும் சேவல் கூவுவது என்பது கிராமத்து வாழ்க்கையில் ஒன்று. அதை நிறுத்த வேண்டும் என்பது காரணமற்ற கோரிக்கையாகும் என கூறுகின்றனர்.

பகிரவும்...