Main Menu

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் பிணையில் விடுதலை!

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் குறித்த பெண் ஊழியர் இன்று (திங்கட்கிழமை) காலை விசாரணைக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அந்தவகையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

சுவிஸ் தூதரக ஊழியர் கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸ், நவம்பர் 25 ஆம் திகதி அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக சுவிஸ் தூதரகமும் அதிருப்தி வெளியிட்டதை அடுத்து, பொலிஸார் மற்றும் சி.ஐ.டி.யினர் விசாரணைகள்மேற்கொண்டனர்.

விசாரணைகளின் முடிவில் சுவிஸ் தூதரக ஊழியர் அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி கருத்துக்கள் மற்றும் தவறான சாட்சியங்களை வழங்கியமைக்காக அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.

அதன்படி சுவிஸ் பெண் ஊழியர் டிசம்பர் 16 அன்று சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனை அடுத்து கடந்த இரண்டு வாரங்களாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதுடன், அவருக்கான வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...