Main Menu

சுவிஸ் தூதரக அதிகாரிக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்!

போலியான முறைப்பாடொன்றை பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரிக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) குற்றப்பத்தரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடையாளந் தெரியாத நபர்களினால் தான் கடத்தப்பட்டு பாலியல் துன்பறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக, கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி ஒருவர், கடந்த 2019 ஆம் ஆண்டில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.

 எனினும், அந்த முறைப்பாடு போலியானது என குறிப்பிட்டு, சட்டமா அதிபரினால் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபரினால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரதிவாதியான குறித்த பெண்ணை, முன்பிணையில் செல்வதற்கு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், குறித்த வழக்கு, எதிர்வரும் ஜுன் மாதம் 04ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...