Main Menu

சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் பணியிடை நீக்கம்

வீதி விபத்தின் பின்னர் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

“ஒருவர் வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். குறித்த நபரை கைது செய்ய சென்ற போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதன்படி விசாரணைகளை மேற்கொண்டு குறித்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.” 

பகிரவும்...
0Shares