Main Menu

சம்பந்தன் தொடர்பாக எடுத்த தீர்மானத்தை நியாயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குவதற்கான முடிவு சரியானதே என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் இன பாகுபாடுகளுக்கு எதிராக கொள்கையை நிலைநிறுத்தவே ஐக்கிய தேசியக் கட்சி இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், “எங்கள் ஸ்தாபகர் மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க அனைத்து இனப் பிரதிநிதிகளையும் இணைத்தே இந்த கட்சியை நிறுவினார்.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து இலங்கையர்களையும் குறிக்கிறது. இதுதவிர, சம்பந்தனுக்கு அவரது கட்சியின் வேண்டுகோளைத் தொடர்ந்து ஒரு உத்தியோகபூர்வ குடியிருப்பு வழங்கப்பட்டது” என கூறினார்.

இதேவேளை “கொழும்பில் உள்ள பாலதக்ஷ மாவத்தையில் 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நேரடி முதலீட்டு திட்டம் முந்தைய ஆட்சியின் போது முன்னாள் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவால் கொண்டு வரப்பட்டது.

மேலும் இந்த திட்டம் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் மலிக் சமரவிக்ரவே” என்றும் அவர் கூறினார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தங்கியிருக்கும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும்வரை பயன்படுத்த கடந்த அரசாங்கம் அனுமதி வழங்கியது.

இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு வீடுகளை வழங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...