Main Menu

சஜித் பிரேமதாச 55 வீதமான வாக்குகளை பெறுவது உறுதி – தயா கமகே

சஜித் பிரேமதாச 55 வீதமான வாக்குகளை பெறுவது உறுதி என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தயா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பலர் எதிர்காலத்தில் தங்களுடன் இணைந்து கொள்வார்கள் எனவும் அமைச்சர் தயா கமகே கூறியுள்ளார்.

எதிராளியான கோட்டாபய ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக அமைய போவது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி போட்டியிட்டிருந்தால் அது சவாலாக அமைந்திருக்கும் எனவும் அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...