Main Menu

கொவிட்-19: பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 60ஆயிரத்தைக் கடந்தது!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 60ஆயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு நான்கு இலட்சத்து 60ஆயிரத்து 178பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 42ஆயிரத்து 202பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 914பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 59பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...