Main Menu

கொவிட்-19 அபாய நாடுகளின் பட்டியலை வெளியிட்டது பிரான்ஸ்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலை பிரான்ஸ் வெளியிட்டுள்ளது.

16 நாடுகளை உள்ளடக்கிய பட்டியலை புதிய பிரதமர் ஜீன் கெஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த நாடுகளில் இருந்த கொரோனாத் தொற்று பிரான்சிற்குள் பரவாமல் இருக்கவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல், அல்ஜீரியா, துருக்கி, தென்னாபிரிக்கா, பிரேஸில், சிலி, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, மெக்ஸிக்கோ, செர்பியா, கட்டார், மொன்டநேக்ரோ, பனாமா, பெரு, குவைத் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகமாகவும், கொரோனாச் சோதனைகள் முறையாகப் பின்பற்றப் படாததுமான இந்த 16 நாடுகளில் இருந்து வருபவர்களிற்கு, விமான நிலையத்தில் வைத்துக் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

இதேவேளை, அவர்களுக்கு கொரோனாத் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டால், உடனடியாக அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள்.

பிரான்ஸில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 180,528பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 30,192பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...