Main Menu

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்றும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் ரக வாகனமும் , யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்திக்கு அருகில் இன்றைய தினம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதன்போது கூலர் ரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பகிரவும்...