Main Menu

கொரோனா மரணங்கள் குறித்த உண்மைத் தன்மையை மாநில அரசு மறைத்து விட்டது – தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு!

மும்பையில் 950 கொரோனா மரணங்களை மாநில அரசு மறைத்துள்ளதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சர்  உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதன்போதே அவர் மேற்படி குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,  “மும்பையில் கொரோனாவால் ஏற்பட்ட 950 மரணங்கள் இன்னும் அரசால் அறிவிக்கப்படவில்லை.

இது மிகவும் தீவிரமான விடயம். ஆபத்தானதும் கூட. இதில் 500 பேரின் இறப்பு தணிக்கை குழுவுக்குகூட தெரிவிக்கப்படவில்லை. 451 பேரின் இறப்பு தணிக்கை குழுவால் கொரோனா அல்லாத மரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மரணங்கள் அனைத்தும் கொரோனாவால் நிகழ்ந்தவை ஆகும். யாருடைய அழுத்தம் காரணமாக அவை கொரோனா அல்லாத மரணங்கள் என அறிவிக்கப்படுகிறது என்பதை அறிய விரும்புகிறோம்.

மும்பை மாநகராட்சிஇ இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) வழிகாட்டுதல்களை பின்பற்ற மறுத்து விட்டது.  தணிக்கை கமிட்டியின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...