கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியில் இன்று(27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – பாரதிபுரம் பிரதேசத்தில் நேர்ந்த விபத்தில் 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறி, பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.