Main Menu

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ஒலித்தது ”கோட்டா கோ கோம்” – சவப்பெட்டியும் எரிக்கப்பட்டது!

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

தமிழ் தேசிய மேதின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கரடிகோக்கு சந்தியில் இருந்து ஆரம்பமான தமிழ் தேசிய மேநாள் நிகழ்வு பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியை பிற்பகல் 3.30 மணியளவில் அடைந்தது.

குறித்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கோட்டா கோ கோம் என்ற கோசத்தினையு்ம, வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோசத்தினையும் எழுப்பியதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்ற கோசத்தினையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை, விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிப்படுத்தம் கருத்தோவியங்களை தாங்கிய வாகன ஊர்தியும் பேரணியில் இணைந்து கொண்டதுடன், மக்கள் பதாதைகளையும், கோசங்களையும் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது ராஜபக்சக்கள் குடும்பத்தின் முகங்களை அணிந்தவாறு பிரேத பெட்டியையும் ஏந்தி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தியிருந்தனர்.

குறித்த பிரேத பெட்டி டிப்போ சந்தியில் மக்களால் எரியூட்டப்பட்டது. இதன்போது பறை இசையும் இசைக்கப்பட்டு மரண சங்குக்கு ஒப்பான எதிர்ப்பு மக்களால் வெளிப்படுத்தப்பட்டது.

குறித்த பேரணியில் மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சாங்கங்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து மெதின கூட்டம் பசுமை பூங்காவில் இடம்பெற்றது. பறை இசை இசைக்கப்பட்டதனைதொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், எஸ் சிறிதரன், சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பகிரவும்...