Main Menu

காகித பற்றுச்சீட்டுக்களுக்கு தடை?

பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு வழங்கப்படும் காகிதத்திலான பற்றுச்சீட்டுக்கள் வழங்குவதற்கு தடை கொண்டுவரப்பட உள்ளது.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட உள்ளது. காகிதத்திலான பற்றுச்சீட்டுக்களுக்கு பதிலாக ‘டிஜிட்டல்’ முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. தொலைபேசிகளுக்கு குறுந்தகவல்களாகவோ, மின்னஞ்சலாகவோ கட்டண பட்டியலை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

முன்னதாக, வரும் ஜனவரி 1 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டுடன் இந்த காகித பற்றுச்சீட்டு முறைக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தடையை சில மாதங்களுக்கு பிற்போட தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் விலைகளை சரிபார்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாதங்களுக்கு காகிதத்திலான பற்றுச்சீட்டுக்களை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இந்த தடையை வரும் 2023, ஏப்ரல் 1 ஆம் திகதி வரை பிற்போடப்படுவதாக நேற்று வெளியான அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பகிரவும்...