கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்திற்கு ஒப்புதல்
கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி கர்நாடக மத உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம் 2021 என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டமூலம் கல்வி, சலுகைகள், இலவச பரிசுகள் என ஆசைக்காட்டி ஒருவரை மதம் மாற்ற செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் கட்டாய மத மாற்றம் மூலம் நடைபெறும் திருமணங்களை இரத்து செய்ய வழி செய்வதுடன், மதமாற்ற முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 இலட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...