Main Menu

கருத்தடை இலவசம் ஆக்கப்படும்! – சுகாதார அமைச்சர் அறிவிப்பு

இருபத்தைந்து வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கருத்தடை செய்வது இலவசமாக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஜனவரி 1, 2022 ஆம் ஆண்டில் இருந்து இந்த வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார். இன்ரு காலை செய்தி ஊடகம் ஒன்றில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் இது தொடர்பான விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாத்திரம் இலவசமாக்கப்பட்டது ஏன் என கேட்க்கப்பட்ட கேள்விக்கு Olivier Véran பதிலளிக்கையில், “ஏனென்றால் 25 வயதுக்குட்பட்டவர்கள் பல்வேறு கட்டுப்பாட்டுக்குள் வாழ்பவர்கள். அவர்கள் சமூக அமைப்பிலும், பொருளாதாரத்தில் நிலையான இடத்திற்கு வர தாமதமாகும். குழந்தை உண்டாகுவதில் இருந்து அவர்கள் விலகுவது ஒரு பிடிமானத்தை ஏற்படுத்தும்!” என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 15 தொடக்கம் 18 வயதுக்குட்ப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்வது இலவசமாக்கப்பட்டுள்ள போதும் இந்த வயது வரபு 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...