Main Menu

“கன்னியா தமிழரின் பூர்வீகம்” வரும் செவ்வாய்க்கிழமை போராட்டம்!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சியை எதிர்த்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தினை கன்னியா மரபுரிமை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இப்போராட்டம் கன்னியாவில் இடம்பெற உள்ளது.

கையை விட்டுப்போகும் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் தமிழர்களின் பூர்வீக சொத்து என்பதை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கன்னியா மரபுரிமை அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் கட்சி அமைப்பு வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றாக நின்று கன்னியா பகுதிகளைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அமைந்துள்ள பூர்வீகமான பிள்ளையார் ஆலயம் ஒன்றினை அழித்து அங்கு புத்த விகாரை ஒன்றை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமையை எதிர்த்தே இப் போராட்டம் இடம்பெறவுள்ளது.  ஈழத்தில் உள்ள இயற்கையான வெந்நீரூற்றான, கன்னியா வெந்நீரூற்றை, இராவணனன் தனது தாயின் அந்திமக் கிரியைகளுக்காக உருவாக்கியதாக கூறப்படுகின்றது. உல்லாசப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த இந்த இயற்கை வெந்நீரூற்றை பௌத்தமயமாக்கும் முயற்சிகள் பல காலங்களாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...