Main Menu

கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவும் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் உள்ளமை காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளமையால், கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதிய இலத்திரணியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான சர்வதேச விலைமணு கோரலூடாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு கடவுச் சீட்டுக்களை தயாரிப்பதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பைக் கருத்தில் கொண்டு, இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கோரியிருந்த நிறுவனத்திடமிருந்து அவற்றின் ஒரு பகுதியாக 50,000 வெற்று கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் மாத இறுதிக்குள் அல்லது அதற்கு முன் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்ந்ந அறிக்கையில் குறிப்பிடப்பட்டு;ள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிக்கையின்படி, கடந்த வருடம் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில், வெளிநாடுகளுக்குச் சென்ற விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 23 வீதமாகும்.

எனவே வெற்று கடவுச்சீட்டுகள் கிடைக்கும் வரை கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் வருந்துவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.