Main Menu

ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி- விரைவில் இந்தியாவிலும் பரிசோதனை

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி சோதனை விரைவில் இந்தியாவிலும் பரிசோதிக்கப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான உரிமம் விரைவில் பெறப்படும் என சோதனையை நடத்தவுள்ள புனேசீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

அத்துடன் பெரிய எண்ணிக்கையில் அதை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அடார் பூனாவால்லா தெரிவித்துள்ளார்.

மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் இந்த தடுப்பூசி சாதகமான பலனை தந்துள்ளதுடன், நோய் எதிர்ப்புக்கான T  செல்களையும் உருவாக்குவதாக பிரபல மருத்துவ இதழான தி லான்செட் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...