ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அரசாங்க அதிபருடன் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம் (13) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபனை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பாக வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் நிறைவடைந்த அஞ்சல் வாக்களிப்பின் விபரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் நீண்டகால கண்காணிப்பாளர் திரு. நிக்கோலஸ் குகூலிஸ் மற்றும் Ms. ஜோஹான்னா வான் சம்பீக் மற்றும் Ms. மாதுமை பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.