Main Menu

ஐரோப்பியப் பாராளுமன்றம் கொரோனாப் பரிசோதனை மையமாகிறது

ஸ்ரார்ஸ்பேர்க்கிலுள்ள ஐரோப்பியப் பாராளுமன்றக் கட்டடம், கொரோனா நோய்ப் பரிசோதனை மையமாகவும் (centre de dépistage), COVID19 மருத்துவ ஆலோசனை மையமாகவும் இயங்க உள்ளதாக, ஐரோப்பிய விவகாரங்களிற்கான பிரெஞ்சு அரசின் செயலாளர் அமெலி-து-மொன்சலான் (Amélie de Montchalin) தெரிவித்துள்ளார். 

 ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் தற்போதைய தலைவைரான (président) இத்தாலியின் டேவிட் சசோலி (David Sassoli) உடன் இணைந்து, பாராளுமன்றக் கட்டத்தினை COVID19 செயற்பாடுகளிற்காக வழங்குகின்றோம் எனச் செயலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரார்ஸ்பேர்க் ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் வாகனங்களை, பெல்ஜியம் மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகள், தங்கள் கொரோனாத் தேவைகளிற்கு உபயோகப்படுத்த அனுமதியளித்துள்ளதாகவும் ஐரோப்பியப் பாராளுமன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...