Main Menu

எல்லை தாண்டி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் – சஜித்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண இதுவரை காலமாக அரசியல் தலைவர்கள் கையாண்ட ஒரு எல்லைக்கு உட்பட்ட முயற்சிகளை தாண்டி வெகு விரைவில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தியாகமும் என்மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த தமது அரசாங்கத்தை உருவாக்குவதாகவும் அவர் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவை இணைத்த சந்திப்பொன்று இன்று காலை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

இந்த நாட்டில் சகல மக்களும், சகல இனங்களும் பாதுகாக்கப்பட்டு  அவர்கள் அனைவருக்கும் சமூக அரசியல் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். 

அரசியல் சமூக பாதுகாப்பு வழங்கப்பட்டால் மட்டுமே மத இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் உருவாகும். அவ்வாறு ஒரு பயணம் ஆரம்பிக்கப்பட்டால் மட்டுமே நாடு பிளவுபடாது, பயங்கரவாதம் பிரிவினைவாதம் உருவாக்கப்படாது முன்நகர முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

பகிரவும்...