Main Menu

ஊடகவியலாளர் என அடையாளம் காட்டி போராட்டத்தை திசை திருப்ப முயற்சி

ஊடகவியலாளர் என அடையாளம் காட்டி, உள்நாட்டு விசாரணையை வலியுறுத்த கோரியோர் விரட்டியடிக்கப்பட்டனர். கிளிநொச்சியில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் போராட்டம் ஆரம்பமாகவிருந்த இடத்தில் இவ்வாறு தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளம் காட்டி, போராட்டத்தை திசை திருப்ப முற்பட்டவர்களே இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் விரட்டியனுப்பப்பட்டனர்.

தாம் ஊடகவியலாளர்கள் எனவும், இன்றைய போராட்டத்தில் சர்வதேச விசாரணை வேண்டாம், உள்நாட்டு விசாரணை போதும் என கூறி குரல்பதிவு மேற்கொள்ள முயற்சித்தவர்களே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்.

அவர்கள், WEWS.org எனும் நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் எனும் நிறுவன அடையாள அட்டையை காண்பித்து போராட்டத்தை திசை திருப்ப முயற்சித்தவர்களே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுடனும் முரண்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பகிரவும்...