Main Menu

உள்ளிருப்புக் கட்டுப்பாடு ஏப்ரல் 15 வரையில் நீடிப்பு – பிரதமர்

பிரான்சில் தற்சமயம் நடைமுறையில் இருக்கும் உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் (CONFINEMENT) முதற்கட்டமாக, எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகிதி வரை நீட்டிக்கப்படும் எனப் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரசின் நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து இது மேலும் நீட்டடிக்கப்படலாம் எனவும் பிரதமர் தெரிவித்தள்ளார். இந்த முதற்கட்ட நீட்டிப்பானது எதிர்வரும், செவ்வாய்க்கிழமையில் இருந்து இரண்டு வாரத்திற்கு, அதாவது, ஏப்பரல் 15 வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

காவற்துறையின் கட்டுப்பாட்டுச் சோதனைகள் தொடர்ந்து மிகவும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும் எனவும் பிரதமர் எச்சரித்துள்ளார். பிரான்சின் விஞ்ஞான ஆராய்ச்சிக்குழு, ஆகக் குறைந்தது 6 வாரங்கள் உள்ளிருப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...