Main Menu

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியனை கடந்தது!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9.5 மில்லியனை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 95 இலட்சத்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் 4 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, வைரஸ் தொற்றிலிருந்து 51 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் மிகப்பெரிய இழப்பினை சந்தித்த நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அங்கு 24 இலட்சத்து 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக, பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.

பகிரவும்...