Main Menu

உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் பலி

உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் குறித்த குழந்தையின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கிவ்வின் இராணுவ நிர்வாகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், யுவதியொருவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் மீதும் ரஷ்யா தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதேவேளை, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் இரவு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

உக்ரைனுக்கு உதவ வேண்டாம் என மேற்கு நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது எச்சரிக்கையை கடுமையாக்கி வரும் நிலையில் இந்த புதிய தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares