Day: September 7, 2025
உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் பலி

உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் குறித்த குழந்தையின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கிவ்வின் இராணுவ நிர்வாகத்மேலும் படிக்க...
ஜப்பான் பிரதமர் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானம்

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் லிபரல் ஜனநாயக கட்சியின் பிளவை தடுக்கும் நோக்கில் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்தமேலும் படிக்க...
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம்

பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் இந்த முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்தமேலும் படிக்க...
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் அடைந்து கொள்ள கலந்துரையாடல்-கள் அத்தியாவசியம் – IVHRD தலைவர்

ஒற்றுமை மற்றும் கலந்துரையாடல் மூலம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும, உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தை அடைவதற்கு கலந்துரையாடல்கள் மிகவும் அவசியம் என சர்வதேச மனித உரிமை அபிவிருத்திக்கான குரல் (IVHRD) தலைவர் ரகு இந்திரகுமார் கூறினார். சர்வதேசமேலும் படிக்க...
மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கிய நபர் – தலை துண்டான சோகம்

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஜீவபுரம் ரயில் தண்டவாளத்தில் தலையைவைத்து நித்திரையில் இருந்த ஆண் ஒருவரை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த கடுகதி புகையிரதம் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (06) இரவு 10.00 மணிக்குமேலும் படிக்க...
அமெரிக்கா- இந்தியா வலுவான உறவை கொண்டுள்ளது! இந்திய வெளியுறவு அமைச்சர்

அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான உறவை கொண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்தல் தொடர்பாக, இந்தியாமேலும் படிக்க...
காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா நிதியுதவி – உளவு அமைப்பு வெளியிட்ட தகவல்

கனடாவில் உள்ள பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு ஆகிய 02 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்து நிதியுதவி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள் என்றமேலும் படிக்க...
மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்- மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவிப்பு

தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மயிலத்தமடு,மேலும் படிக்க...
ஜெனீவாவிற்கு பயணமானார் வெளிவிவகார அமைச்சர்

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை (08) ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று காலைமேலும் படிக்க...
கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

செம்மணியில் இராணுவத்தால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அனுட்டிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில் இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின்மேலும் படிக்க...
