Main Menu

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்து!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” உக்ரைனில் போர் பதற்றம் நிலவுவதால், இங்கிருக்கும் இந்தியர்கள், குறிப்பாக அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கியிருக்கும் மாணவர்கள் உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பதற்றம் தனியும் வரை உக்ரைனுக்கு அத்தியாவசிய பயணத்தை தவிர்க்குமாறு இந்தியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...