Main Menu

உக்ரேன் அகதிகளுக்காக 600€ மில்லியன் செலவிட்ட பிரான்ஸ்

உக்ரேன் அகதிகளுக்காக இதுவரை 600 மில்லியன் யூரோக்களை பிரெஞ்சு அரசு செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் இருந்து இரஷ்ய-உக்ரேன் யுத்தம் இடம்பெற்று வருகிறது. இதில் உக்ரேனைச் சேர்ந்த பல இலட்சம் மக்கள் நாடு முழுவதும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், இதுவரை பிரான்சுக்கு 106,000 அகதிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த அகதிகளுக்கு தங்குமிடங்கள் மற்றும் உதவித்தொகையினை அரசு பொறுப்பேற்றுள்ளது. அதற்காக இதுவரை €600 மில்லியன் யூரோக்களை செலவிட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் €309.2 மில்லியன் யூரோக்கள் தங்குமிடத்துக்காகவும், €242.2 மில்லியன் யூரோக்கள் உதவித் தொகை வழங்கவும், €13.8 மில்லியன் யூரோக்கள் இன்னபிற தேவைகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் வழங்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...