Main Menu

உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக கவலை

உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உக்ரேனில் வைத்தியசாலைகள், நோயாளர் காவு வண்டி  மற்றும் வைத்தியர்கள் மீது 70 இற்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், குறித்த தாக்குதல் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் மீது தாக்குதல் நடத்துவதென்பது நவீன யுத்தத்தில்  மூலோபாயம் மற்றும் தந்திரங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளது.

உக்ரேனில் மார்ச் 8 ஆம் திகதி கார்கிவ் நகரின் தெற்கே உள்ள இசியம் என்ற இடத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மத்திய வைத்தியசாலையில் முதலாவது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...