Main Menu

ஈரான் விவகாரம்: G7 நாட்டுத் தலைவர்களுடன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் இன்று அவசர ஆலோசனை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இன்று (01) G7 நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனைகளை முன்னெடுக்கவுள்ளார்.

ஈரானின் அணு ஆயுத மிரட்டல் மற்றும் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஒபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டுவது குறித்து இந்த ஆலோசனையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் தனது 6ஆவது கட்டப் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த இராஜதந்திர நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.