Day: March 1, 2026
31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர் இராசபூபதி மார்க்கண்டு (01/03/2026)

யாழ் அல்லாரையை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, யாழ் அல்லாரை சங்கிலிக்கிணற்றடியில் வசித்து வந்தவருமான அமரர் இராசபூபதி மார்க்கண்டு அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் இன்று 01ம் திகதி பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் இராசபூபதிமேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்: முடங்கியது சர்வதேச போக்குவரத்து

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முழுமையாக மூடியுள்ளது. இனி எந்தவொரு கப்பலும் இந்த நீரிணை ஊடாகப் பயணிக்க அனுமதி இல்லைமேலும் படிக்க...
ஈரான் விவகாரம்: G7 நாட்டுத் தலைவர்களுடன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் இன்று அவசர ஆலோசனை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இன்று (01) G7 நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனைகளை முன்னெடுக்கவுள்ளார். ஈரானின் அணு ஆயுத மிரட்டல் மற்றும் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஒபரேஷன்மேலும் படிக்க...
பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளி பயணித்த படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியது. அதனை சீர்செய்ய முற்பட்ட போதுமேலும் படிக்க...
போர் பதற்றம் – வெளிநாட்டு பயணிகளுக்கு 07 நாட்கள் இலவச விசா நீடிப்பு

மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் நாட்டை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அரசாங்கம் ஏழு நாட்கள் இலவச விசா நீடிப்பை அறிவித்துள்ளது. விமானங்கள் தடைபட்டாலோ அல்லது இரத்து செய்யப்பட்டாலோ இலங்கையில் தங்கியிருக்கும் போதுமேலும் படிக்க...
டுபாய் விமான நிலைய தாக்குதலில் நால்வர் காயம்

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கையாளப்பட்டு வருவதாகவும்,மேலும் படிக்க...
தெஹ்ரானில் தொடர்ச்சியான தாக்குதல்

தெஹ்ரானில் உள்ள ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய இலக்குகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. வான்வெளி மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், தெஹ்ரானை நோக்கிய பாதையை ஏற்படுத்தவும் கடந்த ஒரு நாளில் இஸ்ரேலிய விமானப்படை பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளதாகமேலும் படிக்க...
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதல்களையும், அதற்குப் பதிலடியாக ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நேற்று நடைபெற்றுள்ள இராணுவ தீவிரப்பாடுகள் சர்வதேசமேலும் படிக்க...
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது

மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதி சென்ற நிலையில் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணைமேலும் படிக்க...
எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவாது – இலங்கை எரிபொருள் விநியோக சங்கம்

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவியபோதிலும், தற்போது நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் எரிபொருள் விநியோகமேலும் படிக்க...
அலி கமெனி கொலை – கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி ( Ayatollah Ali Khamenei) நேற்று (28.02) காலை நடைபெற்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின்போது அவரது அலுவலகத்தில் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அயதுல்லா அலி கமெனிமேலும் படிக்க...
