Main Menu

ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என பிரெஞ்சு மக்களுக்கு அரசு கோரிக்கை

பிரெஞ்சு மக்களை ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.  அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் போர் மூளலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதால், ஈரானுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தால் பயணத்தை தவிர்க்கும் படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஐரோப்பிய அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சு ஈரானின் அனைத்து பகுதிகளையும் சிவப்பு நிற எச்சரிக்கைக்கு உட்படுத்தியுள்ளது.  தவிர, நேற்று முன்தினம் 7 ஆம் திகதி  Air France தனது ஈரானுக்கான பயணங்களை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்துள்ளது.  

நேற்று புதன்கிழமை காலை Boeing 737 விமானம் 168 பயணிகளுடன் வீழ்ந்துள்ள நிலையில், சில மணிநேரங்களுக்கு முன்னர் 4.5 ரிக்டர் அளவில் ஈரானின் அணு ஆயுத கிடங்கில் நில நடுக்க ஏற்பட்டிருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...