Main Menu

ஈரானில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்

பெண் ஒருவருக்கு நீதி கேட்டு பரிசில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஈரானில் Mahsa Amni எனும் இளம் பெண் ஒருவர் காவல்துறையினரின் விசாரணைகளில் கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஒக்டோபர் 2, ஞாயிற்றுக்கிழமை Place de la République பகுதியில் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து Place de la Nation வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது ‘ஈரான் மிகப்பெரும் சிறைச்சாலையாக மாறிவிட்டது. அங்கு இணையம் தடைப்பட்டுள்ளது. நாம் இன்று ஈரானிய மக்களாக மாறியுள்ளோம்!’ என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Mahsa Amni எனும் 21 வயதுடைய இளம் பெண் இஸ்லாமிய கலாச்சார உடையான புக்கா அணியவில்லை என தெரிவிக்கப்பட்டு செப்டம்பர் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பின்னர் 16 ஆம் திகதி அவர் காவல்துறையினரின் விசாரணைகளில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பலத்த போராட்டம் வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தில் 133 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  

பகிரவும்...