Main Menu

இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு பிரான்ஸ் பொறுப்பேற்காது: எலிசே மாளிகை

பிரான்ஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் தடையின்றிப் பயணிக்க முடியும் என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்து ஒரு தலைபட்சமான கருத்து என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

அவரின் இந்த கருத்துக்கு எந்தவிதத்திலும் பிரான்ஸ் பொறுப்பாகாது என எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.

கொரோனாத் தடுப்பூசிக் கடவுச்சீட்டு தொடர்பாக, இரு நாட்டு ஒப்பந்தங்கள் எதனையும் பிரான்ஸ் இஸ்ரேலுடன் செய்யவில்லை எனவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பிரான்ஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில், கொரோனாத் தடுப்பூசி அத்தாட்சிக் கடவுச் சீட்டு, அல்லது, இலத்திரனியல் அத்தாட்சிப் பத்திரத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்த இரண்டு நாடுகளிற்கும் இடையில் பயணிப்பவர்கள் தடையின்றிப் பயணிக்க முடியும் என இஸ்ரேல் பிரதமர் முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியாக, தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்கள் இரு நாடுகளுக்கு இடையில் பயணிக்க வழி வகுக்க இஸ்ரேலும் கிரேக்கமும் முன்னர் ஒப்புக்கொண்டன.

தடுப்பூசி சான்றிதழ்கள் உள்ள சுற்றுலாப் பயணிகளை எந்த வரம்புகளும் இல்லாமல், சுய தனிமைப்படுத்தல் இல்லாமல் நாடுகளுக்கு இடையில் செல்ல அனுமதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டது.

பகிரவும்...