Main Menu

இலங்கை பாராளுமன்ற குழு சீனா பயணம்

இலங்கை – சீன பாராளுமன்ற உறுப்பினர்களின் நட்புறவு நிமித்தம் ஆளும் , எதிர்க்கட்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சீனா சென்றுள்ளனர். 

எதிக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்த விஜயம் அமைந்துள்ளது. 

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் , எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தண, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்தி ஸ்ரீகந்தராஜா ஆகியோர் இந்த விஜயத்தில் உள்ளடங்குகின்றனர். 

பகிரவும்...