Main Menu

இலங்கையின் பொருளாதாரம் குறித்து கவலை வெளியிட்டுள்ள உலக வங்கி

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர் (uans Timmer) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால், பல பிரச்சினைகளை இலங்கை எதிர்கொண்டுள்ளதென்றும் அரசாங்கத்தால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உண்டெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையின் முக்கிய பிரச்சினை, மொத்த உற்பத்திக்கு அமைவாக நடைமுறையில் உள்ள கடன் அதிகமாக இருப்பதேயாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் கடனைச் செலுத்தும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பது முக்கிய தேவையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...